
நாக சைதன்யாவை பிரியவிருப்பதாக நடிகை சமந்தா சமீபத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில் நடிகை சமந்தா, விவாகரத்து என்பது வலி நிறைந்தது. என்னை அதில் இருந்து தனியாக மீண்டு வர அனுமதியுங்கள் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் சமந்தா நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கைதி, தீரன் அதிகாரம் ஒன்று என்ஜிகே ஆகிய படங்களைத் தயாரித்த டிரீம் வாரியர் பிக்சர்ஸின் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் படத்தில் சமந்தா நடிக்கவிருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை சாந்த ரூபன் எழுதி, இயக்குகிறார்.
இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவகாரத்து பிரச்சனைகளில் இருந்து மீண்டு வர இந்தப் படம் சமந்தாவுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படும் நிலையில் பலரும் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.