• Thu. Dec 5th, 2024

பழைய லுக்கிற்கு மாறியிருக்கும் சந்தானம்

Jun 8, 2021

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த காமெடி நடிகர்களில் ஒருவர் நடிகர் சந்தானம். ஒருகாலத்தில் இவர் இடம்பெறாத படமே இல்லை என்ற அளவிற்கு இருந்தது.

எந்த ஒரு புதுப்பட ரிலீஸ் என்றாலும் அதில் இவர் இருப்பார். அந்த அளவிற்கு இவரது காமெடிகளும் ரசிகர்களிடம் நல்ல ரீச் பெற்றது.

இப்போது அவர் காமெடி நடிகராக இருப்பதை நிறுத்தி ஹீரோவாக படங்கள் நடித்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.

இடையில் உடல் எடையை மிகவும் குறைத்து ஒல்லியாக காணப்பட்டார். ஆனால் தற்போது அவர் மீண்டும் கொஞ்சம் உடல் எடை போட்டு பழைய லுக்கிற்கு மாறியிருப்பதாக தெரிகிறது.

அண்மையில் மாஸ்க் அணிந்து அவர் வெளியே வர சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.