• Mon. Dec 16th, 2024

நடிகர் வடிவேலுவை சந்தித்த சந்தோஷ் நாராயணன்

Sep 18, 2021

நடிகர் வடிவேலுவை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குடும்பத்துடன் சந்தித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலு நடிக்கும் நாய்சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தை இயக்குநர் சுராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு இயக்குநர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

எனவே நேற்று நடிகர் வடிவேலுவை சந்தோஷ் நாராயணன் மற்றும அவரது குடும்பத்தினர் சந்தித்து உரையாடினர். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.