• Tue. Dec 3rd, 2024

குடும்பங்கள் கொண்டாடும் கதையில் சரத்குமார் மற்றும் சுஹாசினி

Dec 8, 2021

குடும்பங்கள் கொண்டாடும் கதையம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றில் நடிகர் சரத்குமார் மற்றும் சுஹாசினி ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஷ்குமார் தயாரிக்கும் இந்த படத்தை பாலுச்சாமி இயக்கவுள்ளார். மண்ணின் மகளாக மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் சுஹாசினி நடிக்கவுள்ளதாவும், இன்னொரு முக்கிய வேடத்தில் அஷ்வதி நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் சேர்ந்து நந்தா, சிங்கம் புலி, சித்திக், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.