• Sat. Jul 20th, 2024

கொமெடி ராஜா கலக்கல் ராணி; கொமெடி நட்சத்திரங்களுடன் ஜோடி சேரும் சீரியல் பிரபலங்கள்

Jun 16, 2021

விஜய் டிவி கொமெடி நட்சத்திரங்களுடன் சீரியல் பிரபலங்கள் கலந்துக் கொண்டு கொமெடி ராஜா கலக்கல் ராணி’ எனும் நிகழ்ச்சியில் கலக்கவுள்ளனர்.

பல்வேறு விதமான கொமெடி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, ரசிகர்கள் மகிழ்விப்பது விஜய் டிவி-யின் பாணி. கலக்கப்போவது யாரு, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ், கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அ

தோடு சமையலையும், கொமெடியையும் இணைத்து ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் 2 சீசன்களை ஒளிபரப்பியது விஜய் டிவி.

குறிப்பாக சமீபத்தில் தான் ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி நிறைவடைந்தது. அதில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில் போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஒவ்வொரு குக்குக்கும், கோமாளிக்கும் பெரிய ரசிகர் பட்டாளங்கள் உருவாகின. இதில் வின்னராக கனியும், ரன்னர்களாக ஷகிலா மற்றும் அஸ்வினும் இடம் பெற்றனர். குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், புதிய காமெடி நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.

மேலும் இந்நிகழ்ச்சி வரும் ஜூன் 27ஆம் திகதி நண்பகல் 1.30 மணி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது.