• Thu. Oct 31st, 2024

சினிமாவில் அறிமுகமாகும் ஷங்கரின் இரண்டாவது மகள்

Sep 6, 2021

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் சினிமாவில் அறிமுகமாகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்றில் நாயகியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு ’விருமன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கரின் மகள் சினிமாவில் அறிமுகமாகும் செய்தி திரையுலக ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே மூச்சில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.