• Thu. Jan 2nd, 2025

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிம்பு

Oct 16, 2021

கொரியன் படமான ‘ஏ டே’ படத்தின் தழுவலாக ‘மாநாடு’ படம் உருவாகியுள்ளதாக கூறப்படுவதால் சர்ச்சை எழுந்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தின் மெகரசைலா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தப் படம் காலத்தை மாற்றக் கூடியதாக சொல்லப்படும் டைம் லூப் என்ற வகையில் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இந்தப் படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான கொரியன் படமான ‘ஏ டே’ படத்தின் தழுவல் என்ற சர்ச்சை உருவாகியுள்ளது.

மேலும் ஏ டே படக்குழுவினர் மாநாடு தயாரிப்பாளருக்கு விளக்கம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் பரவிவருகிறது.

இதன் காரணமாக மாநாடு படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

அதனால் இந்தத் தகவல் வதந்தியாகவும் இருக்கலாம் என்வும் கூறப்படுகின்றது.