• Tue. Nov 5th, 2024

வெளியாகியது சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Nov 10, 2021

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

சிவகார்த்திகேயன் ஜாலியான அரட்டை மற்றும் ஷிவாங்கி உள்பட பலரது காட்சிகள் இந்த போஸ்டரில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க கல்லூரியில் படமாக்கப்பட்டுள்ள இந்த படம் முழுக்க முழுக்க ஜாலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிய இந்த படத்தை சிவகார்த்திகேயன் மற்றும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பாலசரவணன் காளி வெங்கட், ஷிவாங்கி உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.