• Sat. Dec 7th, 2024

சூர்யாவை போன்று ஹேண்ட்ஸமான சூரி

Aug 27, 2021

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களுள் ஒருவரான சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார்.

தனது யதார்த்தமான காமெடியால் மக்கள் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்த இவர் தொடர்ந்து விஜய், அஜித் , சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து கிடு கிடுவென உயர்ந்தார். சூரி வளர்ந்து வந்த நேரத்தில் டாப் காமெடி நடிகராக பார்க்கப்பட்ட சந்தானத்தையே கீழே இறக்கிவிட்டார்.

பின்னர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து பிசினஸ் துவங்க திட்டமிட்ட சூரி மதுரையில் அம்மன் என்ற ஹோட்டலை திறந்திருந்தார். இப்படி சினிமா தொழில் கையில் இருந்தாலும் சைடு பிசினஸ் போன்று தனக்கு பிடித்த தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகிறார் சூரி.

கூடவே ஒரு காமெடியன் என்பதையும் தாண்டி ஹீரோவை போன்று கட்டான உடல் தோற்றத்தை கொண்டு ஹேண்ட்ஸம் ஹீரோவை போன்று மாறி லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளார். இந்த லுக்கில் சூர்யாவை போன்று இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.