ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.
பொங்கல் பண்டிகைக்கு திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக வெளியீட்டு தேதி இம்மாதம் 24-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தற்போது வரை திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.