• Sat. Sep 23rd, 2023

82 வயதில் வெற்றி பெற்ற பிரபல நடிகரின் தந்தை!

Dec 23, 2021

நடிகர் விஷாலின் தந்தையும், தயாரிப்பாளருமான ஜிகே ரெட்டி சமீபத்தில் சென்னையில் நடைபெறற மாவட்ட ரீதியிலான போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகளை வென்றுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஷால், ”உங்களை நினைத்து பெருமைகொள்கிறேன் அப்பா. நீங்கள் உந்து சக்தியாக திகழ்கிறீர்கள்.

இந்த வயதில் போட்டிகளில் கலந்துகொண்டு விருதுகளை வெல்வது மிகப் பெரிய சதானை. என்னை பொறாமைப்பட வைக்கிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

விஷாலின் தந்தையான ஜி.கே.ரெட்டி தமிழில் சில படங்களை தயாரித்துள்ளார்.

யோகா, உடற்பயிற்சி யோகா உள்ளிட்டவற்றில் ஆர்வமுள்ளவரான ஜி.கே.ரெட்டி அது குறித்து விடியோக்களை தனது யூடியூப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.