• Mon. Feb 17th, 2025

சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்; எஸ்பிபி குறித்து கமல்ஹாசன் உருக்கம்

Sep 25, 2021

எஸ்.பி.பி நினைவு நாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இந்தியத் திரையுலகில் ‘பாடும் நிலா’ என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் எஸ்.பி.பி பாடல் பாடி அசத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனாதொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் 50 நாள்கள் சிகிச்சை பெற்று தொற்றிலிருந்து மீண்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில் எஸ்.பி.பி மறைந்து இன்றுடன் (செப் 25) ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் அவர் குறித்த நினைவுகளைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கமல்ஹாசன் வெளியிட்ட பதிவுஅதில், “ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார்.

என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால்தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.