• Wed. Dec 4th, 2024

வெளியானது பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ

Sep 1, 2021

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் ஐந்தாவது சீசன் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி கமல்ஹாசனின்
டுவிட்டர் பக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இதில் கமல்ஹாசன் ஆரம்பிக்கலாமா என்று கூறுவதுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5 வது சீசனில் லோகோ அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.