தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு எனிமி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. அண்ணாத்த திரைப்படத்தின் மீது இருந்த மிகப்பெரிய எதிர்பார்ப்பால் எனிமிக்கு முதலில் போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை.
ஆனால் இப்போது அண்ணாத்த படத்தின் மோசமான விமர்சனங்களால் இந்த படத்தின் மீது வெளிச்சம் கிடைத்துள்ளது. இந்நிலையில் சேலத்தில் எனிமி படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒரு சம்பவம் நடந்துள்ளது.
குறிப்பிட்ட அந்த திரையரங்கில் படத்தின் இரண்டாம் பாதியை முதலில் தவறுதலாக ஒளிபரப்பியுள்ளனர். ரசிகர்களும் இதுதான் முதல் பாதி என்று நம்பி பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் இடைவேளை நெருங்கிய போது படத்தின் இறுதி கிரடிட்ஸ் போட ஆரம்பித்ததும் இரண்டாம் பாதி தவறுதலாக வந்தது தெரிந்து ரசிகர்கள் கோபத்தில் கத்தி கூச்சல் போட ஆரம்பித்துள்ளனர். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.