• Sun. Apr 21st, 2024

இந்த ஆண்டின் ட்ரெண்டிங் நடிகர்கள் – விஜய்க்கு முதலிடம்

Dec 13, 2021

இந்த ஆண்டில் அதிகம் ட்ரெண்டான தென்னிந்திய நடிகர்களின் டாப் 10 பட்டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் சமூக செயலியாக ட்விட்டர் இருந்து வருகிறது. போராட்டம் தொடர்பான ஹேஷ்டேகுகள் முதல் காமெடி ஹேஷ்டேகுகள் வரை அனைத்தும் ட்விட்டர் ட்ரெண்டிங் மூலமாக கவனம் பெறும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த 2021ம் ஆண்டில் அதிகம் ட்ரெண்டான ஹேஷ்டேகுகள், சம்பவங்கள் உள்ளிட்ட டாப் 10 பட்டியலை முன்னதாக ட்விட்டர் வெளியிட்டது.

அந்த வகையில் தற்போது தென்னிந்தியாவில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகர்கள் குறித்த டாப் 10 பட்டியலை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் உள்ளார். சூர்யா 4வது இடத்திலும், ரஜினி 7வது இடத்திலும், தனுஷ் 9வது இடத்திலும் உள்ளனர்.

இந்த ஆண்டில் அஜித் படங்கள் எதுவும் வெளியாகாததாலும், அஜித் நேரடியாக ட்விட்டரில் கணக்கு இல்லாததாலும் அவரது பெயர் 10வது இடத்தை பிடித்துள்ளார்.