விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவரை நம்பி ஒரு படத்திற்கு எவ்வளவு பட்ஜெட் வேண்டுமானாலும் போடலாம், போட்ட பணத்தை லாபத்துடன் எடுத்துவிடலாம் என்பது பல தயாரிப்பாளர்களின் நம்பிக்கை.
இப்போது தளபதி தனது 65வது படத்தின் வேலையில் இருக்கிறார். நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் வெற்றிகரமாக முடிந்துவிட்டது.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் தான் விஜயின் 66வது படம் குறித்து தகவல் வந்தது. தெலுங்கின் டாப் இயக்குனர் வம்சி, விஜய்யின் 66வது படத்தை இயக்க தில் ராஜு தயாரிக்க இருக்கிறார்.
இப்படம் மெகா பட்ஜெட் படம் என கூறப்படுகிறது. எனவே படத்தின் இணை தயாரிப்பாளராக PVP Productions இணைந்துள்ளதாக கூறப்படுகிறது