• Mon. Jun 5th, 2023

இளையதளபதி விஜய்யை வைத்து….இயக்குநர் மிஷ்கின் வெளியிட்ட ஆசை!

Jun 23, 2021

டுவிட்டர் ஸ்பேஸ் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய இயக்குனர் மிஷ்கின், நடிகர் விஜய்யை வைத்து ஜேம்ஸ்பொண்ட் படம் இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மிஷ்கின். இதையடுத்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம்வருகிறார். இவர் இயக்கத்தில் தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் மிஷ்கின் டுவிட்டர் ஸ்பேஸ் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், “உங்கள் இயக்கத்தில் விஜய் நடித்தால் அவரை எந்த வேடத்தில் நடிக்க வைப்பீர்கள்” என கேள்வி எழுப்பினார். இதற்கு ‘ஜேம்ஸ்பாண்ட்’ என பதிலளித்துள்ளார்.