• Thu. Apr 25th, 2024

பிரித்தானியாவில் இளைஞர்களை எச்சரித்த பிரதமர் போரிஸ் ஜான்சன்!

Jul 20, 2021

பிரித்தானியாவில் இளைய தலைமுறையினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை என்றால், மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.

பிரித்தானிய சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று(19) மாலை வீட்டுக் காவலில் இருந்தபடி நேரலையில் செய்தியாளர்களுடன் பேசிய பிரதமர், பிரித்தானியாவில் தடுப்பூசி போட தகுதி உடைய அனைவரும் தங்களுக்கான தடுப்பூசிகளை தவிர்க்காமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.

பெரும்பாலும் இளைஞர்கள் தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறிய அவர், மீதமுள்ள 18 முதல் 30 வயதிற்கு உட்பட்ட 35 சதவீத இளைஞர்களும் தங்களுக்கான தடுப்பூசியை செப்டம்பர் மாதத்திற்குள் செலுத்திக்கொள்ளவில்லை என்றால், இரவு விடுதிகள் மற்றும் வெகுஜனக் கூட்டங்களுக்கான இடங்களில் தடுப்பூசி கடவுச்சீட்டு கட்டாயப்படுத்தப்படும் என அச்சுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், கோவிட்-19 பெருந்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு ‘தியாகம்’ செய்வது இன்னும் அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.