• Wed. Feb 5th, 2025

யாழில் தொடரும் கொரோனா மரணங்கள்

Aug 14, 2021

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐந்து பேர் நேற்று(13) உயிரிழந்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதடியைச் சேர்ந்த (78 வயது) பெண் ஒருவரும் கொழும்புத் துறையைச் சேர்ந்த (79 வயது) ஒருவரும் புத்தூரைச் சேர்ந்த (75 வயது) ஆண் ஒருவரும் ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த (69 வயது) ஆண் ஒருவரும் கோண்டாவிலைச் சேர்ந்த (48 வயது) ஒருவரும் என ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.