• Mon. Sep 9th, 2024

இலங்கையின் கொரோனா நிலவரம்

Nov 30, 2021

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 747 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 63 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 5 இலட்சத்து 40 ஆயிரத்து 40 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 8 ஆயிரத்து 899 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்கள் 16 பேரும் பெண்கள் 07 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 328ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.