இந்தியாவில் பரவும் டெல்டா எனப்படும் கொரோனா வைரஸ் திரிபுடன் கொழும்பில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து பெறப்பட்ட சிலரின் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்திய போது குறித்த விடயம் கண்டறியப்பட்டதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நீர்ப்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
இருப்பினும் முகக் கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை, பயணக் கட்டுப்பாட்டை பொருட்படுத்தாமை உள்ளிட்ட எந்தவொரு சுகாதார நடைமுறையையும் அந்த பகுதி மக்கள் கடைபிடிக்கவில்லை.
இந்தியாவில் பரவும் அதிதீவிர பாதிப்புக்களை எதிர்நோக்கக்கூடிய டெல்டா வைரஸ் பிரிவு, இன்று முதல் தடவையாக சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்டது.
இந்த வைரஸ் பரவும் பட்சத்தில், பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் அச்சம் வெளியிடுகின்றனர்.