• Tue. Oct 15th, 2024

இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு

Oct 27, 2021

கொரோனா மரணங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும், கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக மரணங்கள் அதிகரித்துள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், மரணங்களின் அதிகரிப்பு தொடர்பில் உறுதியாக கூற முடியாதுள்ளதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்

இந்த நிலை காரணமாக அனைவரும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.