• Wed. Jan 15th, 2025

இலங்கையில் தீவிர சிகிச்சை பிரிவுகள் நிரம்பின!

Aug 23, 2021

இலங்கையிலுள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவுகள் நோயாளர்களால் நிரம்பி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடளாவிய ரீதியாக மருத்துவமனைகளில் சுமார் 186 ICU கட்டில்கள் கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அவை பற்றாக்குறையாக நிலவுவதால் ஏனைய நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட 86 தீவிர சிகிச்சை பிரிவுக் கட்டில்களும் தற்போது கோவிட் நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.