இலங்கையில் மீளவும் நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாகியுள்ளது. நேற்றிரவு 10 மணிக்கு அமுலான இந்த நடமாட்டக் கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி வரையில் தொடரவுள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து, தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய செயற்படுமாறு காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண கோரியுள்ளார்.
அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்றவர்கள் மாத்திரம் வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியும்.
காவல்துறையினரால் நடமாடும் மற்றும் உந்துருளி கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எவரேனுமு் ஒருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்றபட்டால், அருகிலுள்ள வைத்தியசாலைக்கு செல்ல அனுமதி உண்டு.
அத்துடன், மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காகவும் வெளியே செல்ல முடியும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.