குளிர்காலத்தில் ஏ.சி. இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்வதற்கு, ஏ.சி. இயந்திரங்களை வீட்டில் பயன்படுத்துகிறோம். குளிர்காலத்தில் ஏ.சி. இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகளே உடலுக்கு ஏற்படுகின்றது.
- குளிர்காலத்தில் ஈரப்பதம் காரணமாக ஏ.சி. இயந்திரத்தில் அதிகமான தூசு படியும். இயந்திரத்தை இயக்கும்போது அவை காற்றில் பரவும்.
- இதன் மூலம் சுவாசக்கோளாறுகள், ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு உண்டு.
- ஏ.சி. இயந்திரத்தில் இருந்து வரும் குளிர்ந்த காற்றால், சருமம் மேலும் வறட்சி அடையும்.
- நுண்கிருமிகள் பாதிப்பால் சளி, இருமல், சரும பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
- குளிர் காலத்தில் ஏ.சி. இயந்திரங்களை இயக்குவது, அதன் செயல்பாட்டை குறைக்கும்.
- ஏ.சி. இயந்திரத்தில் உள்ள ‘கண்டென்சிங் யூனிட்’ குளிர் காலத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.
- இந்த கண்டென்சிங் யூனிட்டில் உள்ள கம்ப்ரசர் இயங்க, இயந்திரங்களில் ரசாயன எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
- ரசாயன எண்ணெய் அடர்த்தியான தரத்தைக் கொண்டது. இது சூடான நிலையில் சிறப்பாகச் செயல்படக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டது.
- குளிர்காலத்தில் கம்ப்ரசரை சரியாக இயங்காது. இது ஏ.சி. இயந்திரத்தில் கோளாறு ஏற்படுத்தக்கூடும்.
- கம்ப்ரசர்களில் இலகுவான எண்ணெய் இருந்தால், அவை குளிர்காலத்திலும் வேலை செய்யும்.
- குளிர் காலத்தில் ஏ.சி. இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் உள்ள மற்றொரு சிக்கல் என்னவென்றால், குளிரூட்டும் காயில்களில் ஒடுக்கம் இருந்தால், அது உறைந்து போய் யூனிட்டை ஒட்டுமொத்தமாக சேதப்படுத்தலாம்.
- வெப்பநிலை 65 டிகிரி பாரன்ஹீட்டை விடக் குறைவாக இருந்தால், ஏ.சி. இயந்திரங்களை நீண்ட நேரம் இயக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
- பெரும்பாலான நவீன ஏ.சி. இயந்திரங்களில் பாதுகாப்பு நடவடிக்கையாகக் குளிர்ந்த தட்பவெப்ப நிலையில் இயக்கு வதைத் தடுப்பதற்கு சில சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
- சென்சார்கள் இல்லாத பழைய ஏ.சி. இயந்திரங்களை இயக்குவதற்கு முயற்சி செய்யும் போது, அவை சரியாக செயல்படத் தவறலாம் அல்லது சேதமடையலாம்.