• Sun. Dec 1st, 2024

அளவுக்கு மீறினால் விஷமாகும் சீரகம்!

Jul 27, 2021

சீரகம் மிக அதிக மருத்துவ குணங்களை கொண்ட மசாலா வகை உணவு பொருள் ஆகும். இதனை அளவாக பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும்.

ஆனால் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பில் மிக அதிகமாக பயன்படுத்தினால் அதிக ஆரோக்கியம் கிடைக்காது. மாறாக ஆபத்து தான் உண்டாகும்.

அதிகமாக சீரகத்தை சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும். அசிடிட்டி இருப்பவர்கள் சீரகத்தை கொஞ்சமாக சாப்பிடுவதும், அளவாக பயன்படுத்துவதும் நல்லது.

நீண்ட நாட்களாக சீரகத்தை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சீரகத்தில் உள்ள எண்ணெய் எளிதில் ஆவியாவதே இதற்கு காரணம். கர்ப்பிணி பெண்கள் சீரகத்தை அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது.

சீரகத்தை அதிகம் எடுத்துக்கொள்வதால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது. பெண்கள் மாதவிடாய் காலங்களில் சீரகத்தை அதிகம் சேர்த்துக்கொண்டால் அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.

எனவே அந்த நேரங்களில் சீரகத்தை தவிர்ப்பது நல்லது. அதிகப்படியான சீரகம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் என்பதால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் சீரகத்தை குறைவான அளவை பயன்படுத்துங்கள்.