• Thu. Nov 21st, 2024

தொடர்ந்து 30 நாட்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் என்னவாகும் தெரியுமா?

Feb 23, 2022

உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக நடைபெறுவதற்கு தண்ணீர் இன்றியமையாத காரணியாகும். எனவே நாம் தினமும் காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தண்ணீர் குடித்தால் எண்ணற்ற பலன்கள் ஏற்படும். ஒருவர் தொடர்ந்து 30 நாட்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் செயல்முறையை பின்பற்றுவதன் மூலம், அவரது உடம்பில் ரத்த அழுத்தம் சீரான முறையில் இருக்கும்.

நமது அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க தண்ணீர் மிகவும் உதவியாக இருக்கும். எனவே தினமும் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம், உடல் எடை விரைவில் குறையும்.

வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம், நீரில் உள்ள சத்துக்கள், வயிற்றுப் படலத்தில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்கிறது.

உடலின் இன்சுலின் அளவு சீராக்கப்படுகிறது. இதனால் நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடிகிறது.

மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவதற்கு, முக்கிய காரணம் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான். எனவே தினமும் இந்த செயல்முறையை தவறாமல் பின்பற்றி வந்தால், பத்தே நாட்களில் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

அன்றாடம் நமது வாழ்நாட்கள் முழுவதும் தொடர்ந்து இந்த செயல் முறையை பின்பற்றி வந்தால், புற்றுநோய் 180 நாட்களில் முற்றிலும் குணமாகிவிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடித்து வருவதன் முலம், அன்றைய நாள் முழுவதும் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்பட முடிகிறது. இதனால் என்றும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.