• Tue. Jul 23rd, 2024

பயறு வகைகளில் மிகவும் சிறந்த பச்சைப்பயறு

Nov 1, 2021

பயறு வகைகளில் பெரும்பாலும் புரத சத்து, நார்சத்து நிறைந்து காணப்படுகின்றன. பயறு வகைகளில் மிகவும் சிறந்தது பச்சைப்பயறு. இதில் நிறைய அளவு கலோரிகள் காணப்படுகிறன.

பச்சைப்பயறில் புரதசத்து, நார்சத்து , கனிம உப்புக்களும் அதிக அளவில் காணப்டுகிறன. இதில் வைட்டமின் சி , ஏ ஆகியவையும் காணப்படுகின்றன. இரும்புசத்து நிறைந்து காணப்படுவதால் இது உடலுக்கு மிகுந்த வலுவை சேர்க்கிறது.

பொட்டசியம், எலும்புகளுக்கு தேவையான கால்சியம், மாங்கனீசு போன்ற கனிம தாதுக்களும் நிறைந்து காணப்படுகின்றன. உடல் செரிமானத்திற்கு பாசிப்பயறு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதில் காணப்படக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலின் உணவுகளை சீக்கிரமாக செரிமானமாக உதவிகரமாக உள்ளது.

இரத்த அழுத்தத்தை சீராக்க பாசிப்பயறு முக்கிய பங்கு ஆற்றுகிறது. இதயத்தை பாதுகாக்க பாசிப்பயறு உணவுகள் முக்கிய பங்கினை அளிக்கிறது.ஏனென்றால் இதில் காணப்படக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடம்பில் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுத்து மாரடைப்பு,பக்கவாதம் ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்கிறது.

ஆரோக்கியமான உடல் எடைக்கு பாசிப்பயறு முக்கிய உணவு பொருளாகும். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் பாசிப்பயறு சாப்பிடுவதன் மூலம் அது அவர்களுக்கு நீண்ட நேரம் பசித்தன்மையை குறைத்து உடல் எடையை பாதுகாக்கிறது.

பாசிப்பயறு நோய் எதிர்ப்புசக்தியை அதிக அளவு கொடுக்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு பாசிப்பயறு நன்கு சாப்பிடுவதால் அவர்களுக்கு இரும்புசத்து, புரதசத்து, நார்சத்து அதிக அளவு கிடைக்கிறது.

சரும பராமரிப்பில் பாசிப்பயறு முக்கியமாக நிறைய பங்கினை தருகிறது. சருமத்தில் காணப்படக்கூடிய அழுக்குகளை நீக்கி முகம் பொலிவை தருகிறது.