• Mon. Dec 2nd, 2024

எடை குறைக்கும் பானம் தயாரிப்பது எப்படி?

Jan 12, 2022

நம்மில் பலர் தற்போது பணி சூழ்நிலை காரணமாக வீட்டிலேயே இருக்க வேண்டியிருக்கிறது. இதனால் நமது உடலுக்கு அதிக இயக்கங்கள் கொடுக்கப்படுவதில்லை. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கிறது. இந்த நிலையில் இன்று எடை குறைக்கும் பானம் பற்றி பார்க்கலாம்.

வெல்லம் மற்றும் எலுமிச்சை கலந்து தயாரிக்கப்படும் இந்த பானத்தில் அதிக அளவில் சத்துக்கள் நிரம்பியுள்ளது.

உடல் பருமன், கொழுப்பு அதிக எடை, நீரிழிவு வியாதி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தினசரி இந்த வெல்லம் மற்றும் எலுமிச்சை சேர்ந்த சாற்றை அருந்தலாம்.

நெஞ்செரிச்சல், வயிற்று வலி போன்ற பிரச்சினைகளையும் இது சரி செய்கிறது. அதுமட்டுமல்ல இது நமது உடலில் ஒரு கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

பானம் செய்முறை

  • சிறிதளவு தண்ணீரில் வெல்லத்தை சேர்த்து கொதிக்க விடவும். இந்த தண்ணீரை வடிகட்டி ஆறவிடவும்.
  • வெதுவெதுப்பாக இருக்கும் வெல்லம் கலந்த நீரில் எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி சேர்க்கவும்.
  • இவை இரண்டையும் நன்றாக கலந்து குடிக்கவும். தினமும் வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிக்கும் போது உங்கள் உடல் எடையை குறைக்க முடியும்.
  • இதனுடன் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள்.