• Tue. Jul 23rd, 2024

மருத்துவ குணம் அதிகம் கொண்ட கற்பூரவள்ளி இலை

Aug 23, 2021

மருத்துவ குணம் அதிகம் கொண்ட கற்பூரவள்ளி இலையை பச்சையாகவோ அல்லது உலர்ந்த வடிவிலோ சாப்பிடலாம். கற்பூரவள்ளி இலைகளை பச்சையாக சாப்பிடுவதற்கு முன் அதனை நன்றாக கழுவிய பிறகு சாப்பிட வேண்டும்.

கற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கை குறையும்.

கற்பூரவள்ளியில் வைட்டமின் கே ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் கே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும்.

கற்பூரவள்ளி முதுமைத் தோற்றத்தை தடுப்பதோடு பல சரும நோய்களையும் எதிர்க்கும். கற்பூரவள்ளி இலைகளில் டயட்டரி நார்ச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

சளி, காய்ச்சல், அடிவயிற்று வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கற்பூரவள்ளி இலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

கற்பூரவள்ளி இலைகளில் பொட்டாசியம் வளமான அளவில் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை குறைக்கும். இதயத் துடிப்பைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்.

நெஞ்சு சளி பிரச்சனை உள்ளவர்கள் ஒரு டம்ளர் நீரில் கற்பூரவள்ளி எண்ணெய் 3 துளிகள் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு 4-5 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது அஜீரண கோளாறுகளை சரி செய்யும்.