எந்தவொரு உணவை சாப்பிட்டாலும் அதில் நன்மை மற்றும் தீமை என இரண்டும் கலந்து இருக்கும். அந்த வகையில் வெந்நீரை குடிப்பது நன்மை கொடுத்தாலும் தொடர்ந்து வெந்நீர் பருகுவதால் தீய விளைவுகளும் ஏற்படும்.
வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்
- சூடான நீரை தினம் குடிப்பதால், அதனுடையை வெப்பம் உதடுகளை பாதிப்படைய செய்யும்.
- சூடான நீர் நம் உடலினுள் உள்ளிறங்கும் போது உணவு குழாய் மற்றும் செரிமான பாதைகள் பாதிப்படையலாம்.
- தினம் அதிகமாக வெந்நீர் பருகும் போது மூளையில் உள்ள செல்கள் வீக்கமடைந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
- இரவு நேரத்தில் உறங்க செல்லும் முன் அதிகமாக வெந்நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது தூக்கமின்மையை உண்டாக்கும்.
- வெந்நீரானது சிறுநீரகத்தின் வேலையை அதிகரிப்பதோடு, சிறுநீரகத்தை சேதமடைய செய்து, பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
- அதிக அளவு வெந்நீர் குடிப்பது, ரத்தத்தில் உள்ள எலெக்ட்ரோலைட்டை நீர்த்து போக செய்து, செல்களில் வீக்கம் தலைவலி, மூளை அழுத்தம் போன்ற பிரச்சனையை உண்டாக்கும்.