அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்த ஒன்று தான் கருவாடு. கடல் உணவுகளில் மிக முக்கியமாக விரும்பி சாப்பிடும் மீனை, காயவைத்து கருவாடாக கொண்டு வருகின்றனர். இவ்வாறு அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும் கருவாடு சிலருக்கு எதிரியாகவும் இருக்கும்.
கருவாடுடன் எதை சாப்பிடக்கூடாது?
கருவாடு மட்டுமின்றி மீன், நண்டு போன்ற உணவுகள் சாப்பிடும் போதும், மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது. ஒவ்வாமையை ஏற்படுத்தி பெரும் பிரச்சினையை கொண்டு வரும்.
எதை சேர்த்து சாப்பிடலாம்?
மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி போன்றவை சேர்த்து ரசம் வைத்து கருவாட்டுடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானது.
மேலும் இந்த ரசத்தை தனியாக குடித்து வந்தால் அஜீரணம், வாந்தி, பேதி ஆகாமல் தடுக்கும்.
கருவாடு யார் சாப்பிடக்கூடாது?
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது கருவாடு, மீன், நண்டு, இறால், தயிர், மோர் போன்ற உணவுகள் சாப்பிட கூடாது.
சைனஸ், மூக்கடைப்பு, சளி, இருமல், தும்மை, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற கோளாறு உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கவே கூடாது.
இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உப்பு அதிகமான உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது, ஆகையால் அவர்க கருவாடு அதிகம் உண்ணுதல் கூடாது.
மேலும், மீன், கருவாடு சாப்பிட்ட பிறகு பால், தயிர் சாப்பிடக்கூடாது.