சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை இரவில் படுக்கும் முன் உட்கொண்டால், உடலில் நீர்ச்சத்தின் அளவு அதிகரிக்கும் மற்றும் உடல் சூடும் குறையும். அதுமட்டுமின்றி, இந்த காய்கறியை இரவில் உட்கொண்டால், நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். இதுவரை இருக்கும் உணவுப் பொருட்களிலேயே வெள்ளரிக்காயில் 96% நீர்ச்சத்து உள்ளது. ஆகவே இதனை கோடையில் அதிகம் உட்கொண்டு வந்தால், செரிமான மண்டலத்தில் உள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படும். குறிப்பா இரவில் படுக்கும் முன் இதனை உட்கொண்டால், உடல் வெப்பம் தணியும்.
பரங்கிக்காயில் பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவை ஏராளமாக உள்ளது. இதனை கோடையில் உட்கொண்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். மேலும் உடல் வெப்பமும் குறையும்.
பீர்க்கங்காய் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். மேலும் இதிலும் நீர்ச்சத்து உள்ளதால், இதனை இரவில் உட்கொண்டு வர, செரிமான கோளாறுகள் மற்றும் உடல் சூடு போன்றவற்றில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.
உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால், இது உடல் சூடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எதிர்த்துப் போராடி, இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.
தயிரில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கால்சியம் ஏராளமான அளவில் உள்ளது. தயிரை இரவில் உட்கொள்வதன் மூலம், நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும். மேலும் உடல் வெப்பத்தைக் குறைக்கும்.