• Tue. Mar 26th, 2024

கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் உண்ண வேண்டிய உணவுகள் எவை?

Sep 2, 2021

கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களிலும் உண்ணும் உணவுகள் மற்றும் செயல்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

இந்த நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் புரோட்டின் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக் கூடியது.

புரோட்டின் கருவின் வளர்ச்சியை அதிகரிக்கவும் கால்சியம் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும் உதவுகிறது.

பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளது. இதை கர்ப்ப காலத்தில் பெண்கள் உட்கொள்ளும் போது தாயின் உடலில் இரத்த ஓட்டமானது அதிகரிப்பதோடு கருவில் உள்ள சிசுவிற்கும் சீரான அளவில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

வெண்டைக்காயில் அதிகளவு போலிக் ஆசிட் இருப்பதால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் பிரசவம் சிக்கல் இல்லாமல் நடக்கும். மேலும் வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோயைத் தடுக்கலாம்.

ஆரஞ்சில் அதிகமான விட்டமின் சி இருப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள போலிக் அமிலம் பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் மற்றும் அதிகளவு புரோட்டின் உள்ளது. எனவே கர்ப்பிணிப் பெண்கள் பாதாமை அதிகளவு உட்கொண்டால் கரு வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டின் கிடைக்கும்.