• Tue. Mar 26th, 2024

யுடீயூப்பில் வெளியாகும் ஓவியாவின் வெப் சீரீஸ்

Jun 5, 2021

ஓவியா 2010 ஆம் ஆண்டு தமிழில் வெளியான களவாணி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் ஓவியாவினைப் பிடித்துப் போன பலரும் ஓவியாவிற்கென ஆர்மியை ஆரம்பித்துக் கொண்டாடினர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் 90 எம்.எல் என்ற திரைப்படத்தின்மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கினார். ஓவியாவின் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையினை ஏற்படுத்தியது.

அதன்பின்னர் கணேசா மீண்டும் சந்திப்போம், காஞ்சனா 3, ஓவியாவை விட்டா யாரு, களவாணி 2, பிளாக் காஃபி போன்ற படங்களில் நடித்தார்.

தற்போது ராஜ பீமா, சம்பவம் போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். இதனைத் தவிர்த்து கையில் பெரிதாக படம் ஏதும் இல்லாததால் நடிகை ஓவியா வெப் சீரீசில் நடிக்கத் துவங்கியுள்ளார்.

அதன்படி ’மெர்லின்’ என்று பெயரிடப்பட்ட வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரானது இன்று(05) முதல் யூடியூப்பில் வெளியாக உள்ளதாக விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.