• Thu. Feb 13th, 2025

இலங்கை குறித்து கனடாவின் எச்சரிக்கை

Jan 15, 2022

இலங்கையில் வாழும் கனடா பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதில் இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாக கனடா கூறியுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்து வகைகள், எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், உணவு, குடிநீர், எரிபொருள் ஆகியவற்றை சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், இலங்கையிலுள்ள தமது நாட்டு பிரஜைகளிடம் கனடா வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, உணவு மற்றும் எரிபொருள் தொடர்பிலான தகவல்களை அறிந்துக்கொள்ள உள்ளுர் ஊடகங்களை கண்காணிக்குமாறும் கனடா கேட்டுக்கொண்டுள்ளது.