• Mon. Nov 4th, 2024

இன்று கூடுகின்றது இலங்கையின் பாராளுமன்றம்

Apr 5, 2022

பாராளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

தொடர்ச்சியாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை(08) வரை பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை மீதான விவாதம் எதிர்வரும் எட்டாம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.