• Fri. Mar 21st, 2025

ஐபிஎல் தொடரிலும் தலைமைப் பதவியை துறக்கும் கோலி

Sep 20, 2021

இந்திய அணியின் கேப்டன் கோலி டி 20 அணிக்கானக் கேப்டன் பதவியை சில நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

சில தினங்களுக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, நடக்கவுள்ள டி 20 கோப்பைக்கு பின்னர் அணிக் கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாக அறிவித்தார். அதன் பின்னர் வீரராக மட்டும் தொடர்வேன் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் இப்போது ஐபிஎல் தொடரிலும் கேப்டன் பதவியை துறக்க உள்ளார். தற்போதைய நடப்பு சீசனுக்குப் பின்னர் அவர் ஆர் சி பி அணியில் வீரராக மட்டும் தொடர உள்ளதாக தெரிவித்துள்ளதாக ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது.