• Sun. Dec 22nd, 2024

ஐபிஎல் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி

Sep 15, 2021

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.

2021 ஆம் ஆண்டின் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் வரும் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க உள்ளது.

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்கள் இணையதளத்த்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.