இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று நடந்த இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இதையடுத்து இங்கிலாந்து தன்னுடைய முதல் இன்னிங்சில் பேட்டிங்கை தொடங்கியது.
இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹசீப் ஹமீத் மற்றும் ரோரி பர்ன்ஸ் முறையே 6 ரன்கள் மற்றும் 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.
டேவிட் மாலன் 1 ரன்னுடனும் ஜோ ரூட் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட இங்கிலாந்து அணி 456 ரன்கள் பின் தங்கியுள்ளது.