• Sun. Dec 8th, 2024

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளி பெற்றுக்கொடுத்த மீராபாய் சானுவிற்கு அடித்த அதிஸ்டம்

Jul 26, 2021

மணிப்பூர் மாநிலம் இம்பாலைச் சேர்ந்த மீரா பாய் பளு தூக்குதல் போட்டியின் மகளிர் 49 கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.

இந்நிலையில் டோக்யாவில் இருந்து விமானம் மூலம் தனது பயிற்சியாளர் உடன் மீரா பாய் டெல்லி வந்தடைந்தார். பாதுகாவலர்கள் புடை சூழ வீர நடையிட்டு வந்த வெள்ளி நாயகிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன் பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மீரா பாய், ஐந்த ஆண்டு கால அர்ப்பணிப்பின் பலனாக வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதனிடையே, வெள்ளிப்பதக்கம் வென்ற மீரா பாயை கௌரவிக்கும் விதமாக மணிப்பூர் காவல்துறையில் அவருக்கு கூடுதல் கண்காணிப்பாளர் பதவி வழங்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை மணிப்பூர் முதலமைச்சரின் செயலகம் வெளியிட்டுள்ள நிலையில் மீராபாய் சானுவின் கடின உழைப்புக்கு கிடைத்த பலன் என பலரும் பாராட்டி வருகின்றனர்.