• Wed. Dec 25th, 2024

500 டி20 போட்டிகளில் விளையாடிய சாதனையை பெற்ற பிராவோ

Sep 16, 2021

500 டி20 போட்டிகளில் விளையாடிய சாதனையை சிஎஸ்கே அணி வீரர் பிராவோ செய்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சிஎஸ்கே அணியில் உள்ள வீரர்களில் ஒருவரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரருமான பிராவோ 500 டி20 போட்டிகளில் விளையாடி சாதனை செய்துள்ளார்.

கரீபியன் பிரீமியர் லீக் என்ற தொடரில் விளையாடிய போது அவர் தனது 500வது போட்டியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 போட்டியில் 500 போட்டிகளில் விளையாடிய சாதனையை இதற்கு முன் ஏற்படுத்தியவர் அதே மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த பொல்லார்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 500 போட்டிகளில் விளையாடிய சாதனையை செய்த இரண்டாவது வீரராக பிராவோ உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் 19-ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.