• Tue. Jun 6th, 2023

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட் போட்டி

Mar 21, 2022

வெஸ்ட் இண்டீஸ் -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ் டவுன் நகரில் நடைபெற்றது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 507 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டிஸ் அணி 411 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்தது.

இதையடுத்து தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டத்தின் கடைசி நாளான இன்று 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து வெஸ்ட் இண்டீசுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 2வது இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 65 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.