அமெரிக்க பொழுதுபோக்கு சண்டை உலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ட்ரிபுள் ஹெச் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபலமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்று WWE என சொல்லப்படும் ரெஸ்லிங் சண்டைகள். அதில் பல ஆண்டுகாலமாக சூப்பர் ஸ்டாராக செயல்பட்டு வந்தவர் ட்ரிபுள் ஹெச். இப்போது தனது ஓய்வை அறிவித்துள்ளார். அவரின் உண்மையான பெயர் பால் லெவிஷ்க்.
ஓய்வுக்குப் பின்னர் பேசியுள்ள அவர் எனக்கு வைரல் நிம்மோனியாவால் நுரையீரல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் இனிமேல் என் வாழ்க்கையில் நான் குத்துச் சண்டையில் ஈடுபடவே மாட்டேன் என அறிவித்துள்ளார்.