• Thu. Dec 26th, 2024

டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன்; விராட் கோலி

Sep 16, 2021

துபாயில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு பிறகு டி20 கேப்டன் பதவியை விராட் கோலியிலிருந்து விலகுவதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விராட் கோலி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பொறுப்பிலிருந்து விலகும் முடிவை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மற்றும் தலைவர் கங்குலியிடம் கூறிவிட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்த டி20 கேப்டன் பதவியிலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக பல்வேறு செய்திகள் இது தொடர்பாக வெளியாகி வந்த நிலையில் தற்போது விராட் கோலி தனது அறிக்கை மூலம் உறுதி செய்துள்ளார்.

இதேவேளை டி20 அணிக்கு மட்டும் ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தமை குறிப்பிடத்தக்கது.