• Fri. Jul 26th, 2024

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் வெற்றிவாகை சூடும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்

Jun 16, 2021

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் வெற்றிவாகை சூடும் சம்பியன் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிசு வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது.

உப சம்பியன் அணிக்கு எட்டு இலட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுவதுடன், ‍உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு நான்கு இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர் கிடைக்கும்.

இப்போட்டித் தொடரின் 4 ஆம் இடத்தை பிடிக்கும் அணிக்கு மூன்று இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலரும், 5 ஆவது இடத்தை பிடிக்கும் அணிக்கு இரண்டு இலட்சம் அமெரிக்க டொலரும் கிடைக்கும்.

9 அணிகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரில் ஏனைய இடங்களைப் பிடித்த நான்கு அணிகளுக்கும் தலா ஒரு இலட்சம் டொலரும் வழங்கப்படும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த புள்ளியல் பட்டியலில் 8 ஆவது இடத்தைப் பிடித்துள்ள இலங்கை அணிக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் கிடைக்கவுள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இங்கிலாந்தின் செளத்ஹாம்டனில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.