• Sat. Jul 20th, 2024

ரஷிய வீராங்கனை வெற்றி பெற்றால் பதக்கம் வழங்கும் விழா நடைபெறாது!

Feb 14, 2022

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு ஸ்கேட்டிங் போட்டியில் ரஷிய வீராங்கனை காமிலா வலைவா வெற்றி பெற்றால் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறாது என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தடை செய்யப்பட்ட மருந்து பரிசோதனையில், 15 வயதான ரஷியாவின் காமிலா வலைவா அதனை பயன்படுத்தியது உறுதியானது.

இது தொடர்பான விசரணை நடைபெற்று வருவதால் அவருக்கு விசாரனையின் முடிவில் தண்டனை வழங்கப்படும் என்று தெரிகிறது. எனினும் அவர் தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தெரிவித்திருப்பதாவது:-

சர்வதேச ஒலிம்பிக் சங்கம் சட்ட விதிகளின் படி செயல்படும், ஆகவே காமிலா வலைவா தொடர்ந்து பெண்கள் ஒற்றையர் பிரிவு ஸ்கேட்டிங் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அனைத்து விளையாட்டு வீரர்களின் நியாயமான நலன் கருதி… 2022 பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளின் போது பதக்க விழாவை நடத்துவது சரியாக இருக்காது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு ஸ்கேட்டிங் போட்டியில் காமிலா வலைவா வெற்றி பெற்றால், ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுகளின் போது பூச்செண்டு வழங்கும் விழா மற்றும் பதக்க விழா எதுவும் நடைபெறாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.