இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருந்த ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு பிசியோதெரபி செய்யும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றாலும் இருநாட்டு கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் ஆலோசனை செய்து இந்த போட்டியை பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஏற்கனவே இந்தியா 2-1 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலையில் இருப்பதால் இந்த தொடரை இந்தியா வென்றதாக அறிவிக்கப்பட்டது.