• Fri. Dec 6th, 2024

ஐ.பி.எல் 15-வது சீசன்; தோனி தலைமையில் தீவிர பயிற்சி

Mar 7, 2022

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது.

ஐ.பி.எல்-ன் முதற்கட்ட போட்டிகளில் 40 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்து இருந்தார்.

மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூரத்தில் உள்ள மைதானத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளது.

இந்த பயிற்சி முகாமில் முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனும் ஆன மகேந்திர சிங் தோனி தலைமையில் ஹரி நிஷாந்த் , ராஜ்வர்தன், ஆசிப் உள்ளிட்ட வீரர்கள் பயிற்சியில் பங்கேற்று உள்ளனர்.

இது குறித்த புகைப்படங்களை சென்னை அணி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் அதிக தொகைக்கு தக்கவைக்கப்ட்ட ஜடேஜா உள்ளிட்ட மேலும் பல வீரர்கள் இந்திய அணியுடன் இருப்பதால் அவர்கள் பயிற்சி முகாமில் பின்னர் கலந்து கொள்ள உள்ளனர்.