• Sat. Jul 20th, 2024

ஐ.பி.எல். இறுதி போட்டி; கொல்கத்தா அணிக்கு வெற்றி இலக்கு

Oct 15, 2021

14வது சீசன் ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று விளையாடி வருகின்றன.

துபாயில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது.
கொல்கத்தா அணியில் மாற்றம் எதுவும் இல்லை. இதனால் ரஸ்செல் விளையாடவில்லை.

இதனையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் 32 ரன்களில் வெளியேறினார்.

ராபின் 31 ரன்களில் ஆட்டமிழந்து உள்ளார். எனினும், தொடர்ந்து விளையாடிய பிளெஸ்சிஸ் அதிரடியாக அடித்து ஆடினார். அவர் அரை சதம் (86) பூர்த்தி செய்து ஆட்டமிழந்து உள்ளார்.

மொயீன் அலி 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி 192 ரன்கள் எடுத்து உள்ளது.

இதனால், கொல்கத்தா அணிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.